எரிந்த நிலையில் ஆடவரின் சடலம் மீட்பு

செர்டாங் , ஆகஸ்ட் 27-

சிலாங்கூர், செர்டாங், கேடிஎம் ரயில் நிலையத்திற்கு அருகில் புதருக்குள் எரிந்த நிலையில் ஆடவர் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

சம்பந்தப்பட்ட இடத்தை கடந்து சென்ற மாது ஒருவரிடமிருந்து இன்று காலை 11.45 மணியளவில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏஏ அன்பழகன் தெரிவித்தார்.

அந்த அழைப்பை தொடர்ந்து செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அரச மலேசிய போலீஸ் படையின் தடயவியல் பிரிவு, தீயணைப்பு, மீட்புப்பிரிவு மற்றும் மருத்துவமனைஅதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஆகியவை மேற்கொண்ட சோதனையில் சம்பந்தப்பட்ட நபர், 43 வயதுடைய ஓர் இந்தோனேசியர் என்று அடையாளம் காணப்பட்டதாக ஏசி.பி. அன்பழகன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS