கோலாலம்பூர், ஆகஸ்ட் 27-
ஓர் இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலெட்சுமியை கண்டுபிடிப்பதற்கு மீட்புப்பணியாளர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தற்போது கடைப்பிடித்து வரும் வழிமுறைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் மேலும் வேறு பல வழிமுறைகளையும் மீட்புப்பணியாளர்கள் கடைப்பிடிக்கக்கூடும் என்று கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் விஜயலெட்சுமி விழுந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப்பணியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஐஜிபி மேற்கண்டவாறு கூறினார்.
அடுத்து எந்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு என்பது குறித்து மீட்ப்பணியாளர்கள் கலந்து ஆலோசிப்பதற்கு முன்னதாக விஜயலெட்சுமியை கண்டு பிடிப்பதில் தற்போது கையாளப்பட்டு வரும் யுக்திகள் தொடரும் என்றும் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.
பாதாள சாக்கடைக்குள் போத்தல்களை வைக்கும் நடவடிக்கை தற்போது கையாளப்பட்டு வருகிறது. இந்த போத்தல்கள், மஸ்ஜிட் இந்தியாவிலிருந்து கோலாலம்பூர் Pantai Dalam- மில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு சென்றடைவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்ற அடிப்படையில் தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ஐஜிபி விளக்கினார்.
இதில் கிடைக்கக்கூடிய விடையை அடிப்படையாக கொண்டே அந்த இந்திய மாதுவை தேடும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வியூகம் வகுக்கப்படும் என்று Tan Sri Razarudin விளக்கினார்.