கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-
விமானப்பயணங்களின் புறப்பாடு 5 மணி நேரம் அல்லது அதற்கும் கூடுதலான நேரத்திற்கு தாமதமானால் சம்பந்தப்ப்டட விமான நிறுவனம், பயணிகளிடம் விமானப் பயணக்கட்டணத்தை முழுமையாக திருப்பித்தரும்படி நிர்ப்பந்திக்கும் புதிய நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படவிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மலேசிய விமானப் பயனீட்டாளர்கள் பாதுகாப்பு கோட்பாட்டில் செய்து கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் ஒரு பகுயியாக இது விளங்குகிறது.
விமானத்தில் பயணம் செய்கின்றவர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கம் பொருட்டு அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த புதிய நடைமுறை, அடுத்த மாதம் அரசாங்கப் பதிவேட்டில் இடம் பெறவிருப்பதாக அந்தோணி லோக் விளங்கினார்.
விமானப் புறப்பாடு, 5 மணி அல்லது அதற்கும் கூடுதலான நேத்திற்கு தாமதமானால் ஒவ்வொரு விமான நிறுவனமும் தனது பயணிகள் விமானப் பயணத்திற்கு செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித் தர கடமைப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.