அரசியல் நோக்கம் கொண்டது, ஹம்ஸா கூறுகிறார்

செபாங் , ஆகஸ்ட் 29-

முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது அரசியல் நோக்கத்தைக் கொண்டது என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறுகிறார்.

முகைதீனுக்கு எதிரான இந்த தேச நிந்தனைக் குற்றச்சாட்டை அந்த கண்ணோட்டத்திலேயே பெர்சத்து கட்சித் தலைவர்கள் பார்ப்பதாக ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டார்.

முகைதீனுக்கு எதிராக தேச நிந்தனை சட்டம் பாய்ந்து இருப்பது, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு எதிராக தீய நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என்றே தாங்கள் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

இது ஓரவஞ்சனையுடன் நடத்தப்பட்ட தாக்குதலாகும். எது எப்படியாயினும், இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக முகைதீனுக்கு கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் பிளவுப்படாத ஆதரவை நல்கி வருவர் என்று ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS