கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-
நாடு முழுவதும் உள்ள 85 லட்சம் ரஹ்மா ரொக்க உதவித் தொகையை பெறுகின்றவர்கள், அந்த நிதி உதவியின் மூன்றாவது கட்ட உதவித்தொகையை இன்று வியாழக்கிழமை முதல் பெறலாம் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
Rahmah உதவித் தொகையை பெறுதற்கு தகுதி பெற்றவர்கள் இன்று முதல் ரொக்கத் தொகையை பெறும் அதேவேளையில் புதிதாக விண்ணப்பம் செய்தவர்கள் மற்றும் நிதி உதவிக்கேட்டு மேல்முறையீடு செய்து கொண்டவர்கள் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் Rahmah ரொக்க உதவித்தொகையை பெறலாம் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது