பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாட்டின் பிரபல ராஜா போமோஹ், இப்ராஹிம் மாட் சின்,

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மண் உள்வாங்கிய சம்பவத்தில் காணாமல் போன இந்தியப் பிரஜை விஜயலெட்சுமியை தேடி கண்டு பிடிப்பதற்காக அந்த மாது விழுந்த 8 மீட்டர் பாதாள சாக்கடை அருகில் மாந்திரீக சடங்கு செய்து மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாட்டின் பிரபல ராஜா போமோஹ், இப்ராஹிம் மாட் சின், / கூட்டரசுப்பிரதேச Mufti அலுவலகத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.

நேற்று மஸ்ஜிட் இந்தியாவிற்கு திடீர் வருகை மேற்கொண்ட ராஜா போமோஹ், / இந்தியப் பிரஜை விஜயலெட்சுமி விழுந்த இடத்தில் ஒரு வகையான நீரை தெளித்து, சில சடங்குகளை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் ராஜா போமோஹ் ,வின் இந்த செயல், சமூகத்தின் மத்தியில் இஸ்லாம் சமயம் மற்றும் பிறரின் துயரம் பற்றிய தவறான புரிதலையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் அந்த நபர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் முகமது நைம் மொக்தார் தெரிவித்தார்.

இதற்கு முன்பு காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்காக மாந்திரீக சடங்கு என்ற பெயரில் ராஜா போமோஹ் நடத்திய சில கவன ஈர்ப்பு நடவடிக்கைகளுக்காக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவர் 1997 ஆம் ஆண்டு கூட்டரசு பிரதேச ஷரியா சட்டத்தின் கீழ் Mufti அலுவலகத்தினால் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி 239 பேருடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்சிஸ்கு சொந்தமான MH 370 விமானத்தை கண்டு பிடிப்பதற்காக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தனது உதவியாளர்களுடன் ராஜா போமோஹ் நடத்திய மாந்திரீக சடங்குகள் பெரும் கவன ஈர்ப்பாக அமைந்தது.

விமான நிலையத்தில் படகு போன்ற ஒரு கட்டமைப்பை செய்து, அதில் பயணம் செய்வது போலவும், அங்கிருந்து தொலைநோக்கி சாதனம் மூலம் அந்த மலேசிய விமானம் விழுந்து இடத்தை தேடுவதாகவும் இளநீர் சடங்கை ராஜா போமோஹ் நடத்தியது உள்நாட்டவர்கள் மட்டுமின்றி உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

WATCH OUR LATEST NEWS