கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-
நாளை மறுநாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நாட்டின் 67 ஆவது தேசியத் தினத்தை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை இரவு டதரன் மெர்டேக்கா- வில் நடைபெறவிருந்த தேசிய தினக் கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வை கோலாலம்பூர் மாநகர் மன்றம் ரத்து செய்துள்ளது.
அன்றிரவு டதரன் மெர்டேக்கா – வில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் இன்று காலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் ஓர் இந்திய மாது பாதாள சாக்கடையில் விழுந்த சம்பவம் உட்பட அண்மையில் மாநகரில் நிகழ்ந்த சில துரயச் சம்பவங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் டதரன் மெர்டேக்கா- வில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரத் தின வரவேற்பு நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.
பெரியளவிலான கொண்டாட்டங்கள் எதுவும் இல்லையென்றாலும் தேசிய தினத்திற்கு அர்த்தம் பொதிக்கும் வகையில் தேசப்பற்றை மனதில் விதைத்து, போற்றும்படி மாநகர்வாசிகளை அது கேட்டுக்கொண்டுள்ளது.