ஆகஸ்ட் 29-
சேலம் அருகே நடைபயிற்சி சென்ற அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை அவரது உடலை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம் அருகே நடைபயிற்சிக்கு சென்ற அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (49). இவர் இரவு நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு நடைபயிற்சி சென்ற அவர் அதிகாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது அதிகாலை 5 மணியளவில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவரது மரணம் தொடர்பான மர்மம் விலகும். உயிரிழந்த ரவி அதிமுகவின் கிளை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.