அலோர் செட்டார் , ஆகஸ்ட் 29-
கடந்த வாரம், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்ததாக ரோஹிங்கியா ஆடவர் ஒருவர், அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
43 வயது அப்துல் கபூர் டோலி அகமது என்ற அந்த Rohingya ஆடவர், மாஜிஸ்திரேட்நூர் சைஃபா முகமது ஹம்சா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் அலோர் ஸ்டார், சுல்தான் அப்துல் ஹலீம் நெடுஞ்சாலையில் காலியான ஒரு கட்டடத்தில் தனது 34 வயது மனைவி நோர் பேகம் முகம்மது யாசின் மற்றும் அதேதினத்தன்று அலோர் ஸ்டார், ஜாலான் பெகவாய், லோரோங் துங்கு முஹம்மது என்ற இடத்தில் தனது ஒரு வயது 11 மாத கைக்குழந்தையை கொலை செய்ததாக அந்த ரோஹிங்கியா ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இதனிடையே மற்றொரு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ரோஹிங்கியா ஆடவர், அதேதினத்தன்று தனது 10 வயது மூத்த மகள் லியானாடா- வை கொலை செய்ததாக மற்றொரு கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.