செலாயாங், ஆகஸ்ட் 29-
அண்மையில் செலாயாங்- கில் உள்ள ஒரு நகைக்கடையில் இரண்டு தங்கச் சங்கிலியை களவாடியப்பின்னர் ஓட்டம் பிடித்த மாது ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் நடைக்கடையின் 33 வயது உரிமையாளரிடமிந்து புகார் பெறப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் ஆரிஃபின் முகமது தெரிவித்தார்.
உள்ளூரைச் சேர்ந்த அந்த மாது, நகைகளை வாங்குவதைப் போல் பாவனை செய்தப்பின்னர் மின்னல் வேகத்தில் அந்த இரண்டு தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு, கடையின் முன் தயாராக காத்திருந்து வெள்ளை நிற Toyota Yaris காரில் தப்பிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட மாது. தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு, காரை நோக்கி ஓடும் காட்சி, ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த 34 வினாடி காணொளியின் வாயிலாக சம்பந்தப்பட்ட மாதுவை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஏசிபி நூர் மேலும் கூறினார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 380 ஆவது பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.