கேபள் ஒயர்கள் களவு/ 16 பேர் கைது

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 30

TM எனப்படும் Telekom Malaysia-விற்கு சொந்தமான கேபள் ஒயர்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக பினாங்கு போலீசார் மேற்கொண்ட ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 16 சந்தேகப்பேர்வழிகள் கைது செய்யப்பட்டது மூலம் பினாங்கில் பரத் தயா, / செபராங் பேரை உடரா மற்றும் செபராங் பேரை உடரா ஆகிய மூன்று மாவட்டங்களில் களவாடப்பட்ட பல்வேறு கேபள் திருட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் டெலிக்கோம் மலேசியாவிற்கு சொந்தமான கேபல் ஒயர்கள் வெட்டுப்பட்டு, களவாடப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையை போலீசார் இம்மாதத்தில் தொடங்கினர் என்று டத்தோ ஹம்சா அகமது குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS