யுக்ரேன் மிகக் குறைந்த செலவில் ரஷ்ய ராணுவத்துக்குச் சவால் விடுவது எப்படி?

30 ஆகஸ்ட் 2024,

மேற்கத்தியத் தொழில்நுட்பமும் நிதியும் ரஷ்யாவிற்குள் நூற்றுக்கணக்கான தொலைதூரத் தாக்குதல்களை நடத்த யுக்ரேனுக்கு உதவி வருகின்றன.

மோதல்கள் தீவிரமடையும் என்ற அச்சத்தால், மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்த யுக்ரேனுக்கு நேட்டோ நட்பு நாடுகள் இன்னும் அனுமதி வழங்க மறுத்துவருகின்றன. இருந்தபோதும் இவை உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

யுக்ரேன், கடந்த சில மாதங்களாக ரஷ்யாவிற்குள் அதன் தொலைதூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. வாரத்திற்குப் பல முறை மூலோபாய இலக்குகள் மீது ஒரே நேரத்தில் ஏராளமான ட்ரோன்களை ஏவி வருகிறது.

விமானப்படை தளங்கள், எண்ணெய் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகள் மற்றும் கட்டளை மையங்கள் உள்ளிட்டவை இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாகும்.

WATCH OUR LATEST NEWS