பேலிங் , செப்டம்பர் 01-
சாலையை கடக்க முற்பட்ட குரங்கு ஒன்றை மோதுவதிலிருந்து தவிர்க்க முற்பட்ட கார் ஒன்று சாலையை விட்டு விலகி தடம் புரண்டதில் தாயும் மகளும் உயரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் கெடா, பாலிங், சிம்பாங் திக கோல பி அகோங் – ஜலான் மால்;அது – கோலா கெட்டில் -லில் நிகழ்ந்தது. 26 வயது சிதி நோர்ஹஸ்லிசா கமருடின் மற்றும் அவரின் தாயார் 69 வயது ஓமி கல்சோம் மேன் ஆகியோர் இவ்விபத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினார்.
Toyota Vios காரை சிதி நோர்ஹஸ்லிசா -வின் 27 வயது கணவர் செலுத்தியதாக கூறப்படுகிறது. கூலிம், சுங்கை செடிம் பொழுது போக்கு பூங்காவிலிருந்து மூவரும், சுங்கைப்பட்டாணி, பீடோங்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.