லோரி ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது

கோலாலம்பூர், செப்டம்பர் 02-

கோலக்கிள்ளான், West Port துறைமுகத்தில் கொள்கலன் லோரியுடன் கடலில் மூழ்கிய அதன் ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.42 மணியளவில் மேற்கு துறைமுகத்தில் கடல் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் கடல் சார் போலீசாரின் ஒத்துழைப்புடன் தீயணைப்பு, மீட்புப்படையினர் மேற்கொண்ட சுமார் நான்கு மணி நேர தேடல் நடவடிக்கையில் மாலை 5 மணியளவில் அந்த லோரி ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது.

முக்குளிப்பவர்களின் உதவியுடன் அந்நபரின் சடலம் மீட்ககப்பட்டதாக மலேசிய தீயணைப்பு, மீட்புப்படையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முஹம்மது ரஸாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS