பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 02-
மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான MH66 விமானம், தென் கொரியாவிற்கான பயணத்தின் போது, மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்பிய சம்பவத்தில் விமானத்தின் HYDRAULIC முறையில் ஏற்பட்ட கோளாறே முக்கிய காரணமாகும் என்று அந்த தேசிய விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த ஏர்பஸ் A330-323 ரக விமானம், நேற்று நள்ளிரவு தென்கொரியா தலைநகர் Seoul- க்கு ( சோல் ) புறப்பட்ட அடுத்த ஒன்றரை மணி நேரத்திலேயே கோலாலம்பூருக்கு திரும்பியது. விமானத்தின் சக்கரங்களை இறக்குவற்கு பயன்படுத்தப்படும் HYDRAULIC முறையில் கோளாறுகள் ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டு பிடித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானத்தை கோலாலம்பூருக்கே திருப்புவது என்று விமானி முடிவு செய்ததாக மலேசிய ஏர்லைன்ஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.