கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர்

கோத்த திங்கி, செப்டம்பர் 02-

ஜோகூர் ஜாலான்கோத்த திங்கி – மெர்சிங் சாலையின் 15 ஆவது கிலோ மீட்டரில் இன்று முற்பகல் 11.52 மணியளவில் நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

Mitsubishi Xpander ரக காரில் பயணம் செய்த ஒரு மாதுவும், ஒரு மோட்டார் சைக்கிளோட்டியும் இவ்விபத்தில் மாண்டதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.

5 டன் லோரி சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் Perodua Viva காரில் பயணம் செய்த பெண் ஒருவரும் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக கோத்தா திங்கி தீயணைப்பு நிலையத்தின் செயலாக்க கோமாண்டர் இப்ராஹிம் அப்துல் வாஹித் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS