சிலாங்கூர்,செப்டம்பர் 02-
சிலாங்கூர் மாநில மகளிர் தொழில் திறன் சங்கத்தின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான மலேசிய தொழில் முனைவோர் உருமாற்ற வர்த்தக விருதளிப்பு விழா கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சுபாங் ஜெயாவில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில மகளிர் தொழில் திறன் சங்கத்தின் தலைவர் யோகேஸ்வரி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விருதளிப்பு விழாவை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு அதிகாரப்பூர்வமக தொடக்கிவைத்தார்.
ஒப்பனை தொழில்துறையை சேர்ந்தவர்கள் அதிகமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 32 நிறுவனங்களிலிருந்து 19 பேர் பாப்பாராயுடுவிடமிருந்து விருது பெற்றனர்.
இந்நிகழ்வில் முற்றிலும் மாறுப்பட்ட துறையைச் சேர்ந்தவரும், வம்சம் கருவுறுதல் நிலையமான Vamsam Fertility and Health Care நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகருமான டாக்டர் சத்தியா அழகிரிசாமிக்கு Queen Of Inspiration Hope And Green World எனும் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
சாதிக்கத்துடிக்கும் பெண்களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் டாக்டர் சத்தியா, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு அத்தகைய பாக்கியம் கிட்டுவதற்கு தமது Vamsam Fertility and Health Care நிறுவனத்தின் மூலமாக கடந்த 7 ஆண்டு காலமாக உரிய வழிகாட்டலையும், விழிப்புணவையும் வழங்கி வருகிறார்.
அதில் ஒரு பகுதியாக தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்திய FEMI 9 sanitary napkin – விற்பனை குறித்த விளக்கமளிப்பையும் இந்நிகழ்வில் டாக்டர் சத்தியா வழங்கினார்.
ஒப்பனைத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள், கூடுதல் வர்த்தக வாய்ப்பாக தங்களின் வர்த்தகத் தளத்திலேயே FEMI 9 sanitary napkin – ஐ விற்பனை செய்ய முடியும் என்று டாக்டர் சத்தியா ஆலோசனைக்கூறினார்..
டாக்டர் சத்தியாவின் பங்களிப்பை பாராட்டிய சிலாங்கூர் மாநில மகளிர் தொழில் திறன் சங்கத்தின் தலைவரும், விருதளிப்பு விழாவின் ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான யோகேஸ்வரி ராஜேந்திரன், டாக்டர் சத்தியாவுடன் கூட்டாக இணைந்து FEMI 9 sanitary napkin – விற்பனையை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லப்போவதாக இந்நிகழ்வில் உறுதி அளித்தார்.
Caption
டாக்டர் சத்தியா அழகிரிசாமி,
நிர்வாக ஆலோசகர்,
Vamsam Fertility and Health Care