சிங்கப்பூர் ,செப்டம்பர் 03-
MVSK UNITED UNIVERSE PRODUCTION ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட 24 ஆம் தேதி சனிக்கிழமை SINGAPORE FLYER, 30 RAFFLES AVENUE, SINGAPORE, PLUME EVENT Hall-லில் 2024 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக ஆசிய இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாடலிங் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்றுப்போட்டி வெகுசிறப்பாக நடைபெற்றது.

MVSK UNITED UNIVERSE PRODUCTION இயக்குநரும், தலைவருமான கிருஷ்ணகுமார் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த மாடலிங் GRAND FINAL போட்டியை அதிகமானவர்கள் கண்டு களித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கிருஷ்ணகுமாரின் சிறப்பு அழைப்பை ஏற்று, மலேசியாவின் வம்சம் கருவுறுதல் நிலையமான Vamsam Fertility and Health Care நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகர் டாக்டர் சத்தியா அழகிரிசாமி இந்நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றினார்.

திருமணம் ஆகாத மாலிங் துறையை சேர்ந்தப் பெண்கள், இந்த வயதில் மாதவிடாய் பிரச்னை தொடர்பான போதுமான விழிப்புணவை கொண்டிருக்கவில்லை என்றால் நாளை, திருமணம் ஆனப்பின்னர், கருவுறுதலில் பிரச்னையை எதிர்நோக்கக்கூடும் என்று டாக்டர் சத்தியா நினைவுறுத்தினார்.

வரும்முன் காப்போம் என்பதற்கு ஏற்ப தங்களின் Vamsam Fertility and Health Care நிறுவனத்தின் FEMI 9 sanitary napkin – னின் பயன்பாட்டை அறிந்து, அதனை வாங்கி பயன்படுத்தத் தொடங்குவார்களோயானால் பல்வேறு உடல் உபாதைகளை தடுக்க முடியும். இதனை மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று டாக்டர் சத்தியா வலியுறுத்தினார்.

FEMI 9 sanitary napkin- னின் கெளரவ தூதராக விளங்கும் பிரபல நடிகை, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவை இவ்வாண்டு இறுதிக்குள் மலேசியாவிற்கு வரவழைக்கவிருக்கும் திட்டத்தையும் தங்கள் நிறுவனம் கொண்டுள்ளதாகவும், இது அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்ற டாக்டர் சத்தியா குறிப்பிட்டார்.

முன்னதாக. இந்த மாடலிங் நிகழ்விற்கு தம்மை அழைத்து உரிய கெளவிப்பை வழங்கிய MVSK UNITED UNIVERSE PRODUCTION இயக்குநர் கிருஷ்ணகுமார், அவரின் குழுவினர், தம்மை அழைத்து வந்த செல்வமேரி ஆகியோருக்கு டாக்டர் சத்தியா தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
Caption
டாக்டர் சத்தியா அழகிரிசாமி,
நிர்வாக ஆலோசகர்,
Vamsam Fertility and Health Care




