கோலாலம்பூர், செப்டம்பர் 03-
மியன்மாரில் மனித வர்த்தகம் தொடர்பாக மலேசியாவின் பெண் அரசியவாதியிடமும், அவரின் கணவரிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதக்கடத்தல் சம்பவம் தொடர்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்ட இந்தோனேசியாவை சேர்ந்த வலைப்பதிவாளர் ஒருரிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
இந்த மனித வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் சில தனிநபர்களின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆராய்ந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மியன்மாரில் மனித வர்த்தகத்தில் அரசியல்வாதியும் அவரின் கணவரும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தும்படிக் கோரி மலேசிய அனைத்துலக சமூக மனிதாபிமான அமைப்பு ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அண்மையில் புகார் அளித்திருந்தது.