பாதுகாவலர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு

அலோர் கஜா ,செப்டம்பர் 04-

தனது மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதுகாவலர் ஒருவர், கோத்தாபாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சட்டப்பட்டார்.

29 வயதுடைய அந்த பாதுகாவலர், நீதிபதி ஜூலிகிஃப்லி அப்துல்லா ( அப்லா ) முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இரவு 7.40 மணியளவில் மச்சாங் அருகில் டி.பி.கே போக் என்ற இடத்தில் எண்ணிடப்படாத ஒரு வீட்டில் 12 வயதுடைய தனது மைத்துணியை பாலியல் பலாக்காரம் செய்ததாக அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS