ஜொகூர் , செப்டம்பர் 04-
ஜோகூர் பாருவில் உண்மையான மதுபானம் போன்று கள்ளசாராயத்தை தயாரித்து வந்ததாக நம்பப்படும் இரண்டு தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் கெங் ஆ மெங் என்ற கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஜோகூர்பாருவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் பிளாஸ்டிக் தோம்பில் 200 லிட்டர் மதுபானமும், பலதரப்பட்ட மதுபான வகையைச் சேர்ந்த 564 பெட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்..
முதல் சோதனை பிற்பகல் 3 மணியளவில் தமன் ஜோகூர் – ரிலும் இரண்டாவது சோதனை பிற்பகல் 4.30 மணியளவில் தமான் கெம்பாஸ் உத்தமா- விலும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த இரண்டு சோதனைகளும் இரண்டு தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டன. இதில் 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட மதுபானத்தின் மொத்த மதிப்பு 12 லட்சம் வெள்ளியாகும் என்று அவர் மேலும் கூறினார்.