கோலாலம்பூர், செப்டம்பர் 04-
சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ இழப்பீட்டில் மோசடிகள், முறைகேடுகள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு இழப்பீடு கோரும் நடைமுறையில் அதிரடி சீரமைப்பு / உடனடியாக மேற்கொள்ளப்படவிருப்பதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.
சொக்சோ இழப்பீட்டை பெறும் ஏமாற்று வேலைக்கு உடந்தையாக இருந்து, மோசடிக்கு துணை நின்றதாக கூறி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்ட ஒப் துன்ஜாங் நடவடிக்கையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சொக்சோ இழப்பீடு கோரும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்படுவதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
நிரந்தர முடத்தன்மை உட்பட சொக்சோ அனுகூலுங்களை பெறுவதற்கு நடப்பு முறைகளை பின்பற்றி, மோசடி புரியப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து சொக்சோவின் இழப்பீடு கோரிக்கை ஒட்டுமொத்த நடைமுறையே முழுமையாக சீரமைக்குமாறு சொக்சோ நிர்வாகத்திற்கு தாம் உத்ததரவிடுள்ளதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
சொக்சோ இழப்பீடு கோரிக்கை தொடர்பான மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் பினாங்கு அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று மருத்துவர்கள் மற்றும் 32 பேர் கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று கோலாலம்பூர் மெனாரா பெர்கேசோ தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனைக் குறிப்பிட்டார்.