கறுப்பு நிறத்தில் கால்வாய் நீர் / கோழிப்பண்ணையை மூட உத்தரவு

போர்ட்டிக்சன் , செப்டம்பர் 04-

போர்ட்டிக்சன், புக்கிட் பெலண்டோக் -கில் சுற்றுச்சூழல் மாசுப்பாடுக்கு வித்திட்ட கோழிப்பண்ணையை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீரோடையில் கறுப்பு நிறத்திலான கால்வாய் நீர், குப்பை மற்றும் புழுக்கள் இருந்தது மட்டுமின்றி அதன் மேல் ஈக்கள் மொய்த்து, சுற்றுச்சூழலுக்கு பெரும் மாசு பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த கோழிப்பண்ணையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநிலத் தொழில்முனைவோர், மனித வள, பருவ நிலை மாற்றம், கூட்டுறவுக்கழக மேம்பாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ் வீரப்பன் தெரிவித்தார்.

புக்கிட் பிளாண்டோக்கில் உள்ள கோழிப்பண்ணையில் இந்த சுற்றுச்சூழல் மாசுப்பாடு நிலை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

இந்த சுற்சுற்றுச்சூழல் மாசுப்பாடு, அருகில் உள்ள கடலுக்கும் மாசை ஏற்படுத்துகிறது என்று சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, இந்த மாசுப்பாடு தொடர்பில் பொது மக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் நேற்று காலை அப்பகுதிக்கு அதிரடிச் சோதனையும், விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாக வீரப்பன் குறிப்பிட்டர்.

விசாரணையில் அந்தக் கோழிப்பண்ணை கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பண்ணையில் இருந்து கால்வாய் வாயிலாக நீர் செம்பனைத் தோட்ட நீரோடையில் கலக்கப்படுவது தெரியவந்துள்ளது.

தவிர, அங்கு கோழி வளர்ப்பு நடவடிக்கைகளுக்காக இரு நீர் சேகரிப்புக் குளங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நீர் மேலாண்மை கட்டுப்பாட்டு வாரியமும், சுற்றுச்சூழல் இலாகாவும் போலீசில் புகார் அளித்துள்ளதாக வீரப்பன் தெரிவித்தார்.

அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அந்த நீரோடையில் இருந்து நீர் மாதிரி எடுத்துக்கொள்ளப்பட்டது என்று நேற்று மாலையில் அவ்விடத்தை நேரில் பார்வையிட்ட வீரப்பன் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

அவ்விடத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் கோழிப்பண்ணை உரிமையாளருக்கு காம்பாவுண்டும் கால்நடை இலாகா வழங்கியுள்ளதாக என்று வீரப்பன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS