பத்து வயது சிறுவன் செலுத்திய கார் விபத்துக்குள்ளானது

சிரம்பான் ,செப்டம்பர் 05-

சிரம்பான், தாமன் அரோவானா இம்பியன், ஜாலான் அரோவானா 2 இல் பத்து வயது சிறுவன் செலுத்திய கார் ஒன்று விபத்துக்குள்ளனாது.

தனது பெற்றோருக்கு சொந்தமான Totota Corolla காரில், அண்டை வீட்டைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனை அழைத்துக்கொண்டு அந்த பத்து வயது சிறுவன், பஞ்சாபுரி அரோவானா -வில் இருந்து தாமன் அரோவானா இம்பியன் – னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது சாலை சந்திப்பில் வேன் ஒன்றை மோதியதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஹட்டா சே தின் தெரிவித்தார்.

இதில் சிறுவன் செலுத்திய காரினால் மோதப்பட்ட வேன், நகர்ந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த Perodua Kancil காரில் மோதியுள்ளது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு சிறுவர்களும் காயம் அடையவில்லை.

சம்பந்தப்பட்ட சிறுவனின் ஆபத்து மிக்க இந்த செயலினால் அவனது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஏசிபி முகமது ஹட்டா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS