ஷா ஆலம், செப்டம்பர் 04-
ஷா ஆலாம், செக்ஷன் 7 இல் உள்ள ஓர் ஏரிப்பூங்காவில் ச முதலை நடமாட்டத்தைத் தொடர்ந்து அந்த ஏரிப்பூங்கா பொது மக்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா இலாகாவினர், அந்த ராட்ஷச முதலையைப் பிடிப்பதற்கு ஏதுவாக பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த ஏரிப்பூங்கா தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு மணி 8 முதல் நாளை காலை 7 மணி வரையில் அந்த பூங்கா மூடப்பட்டு இருக்கும் என்று ஷா ஆலாம் மாநகர் மன்றத்தின் பொது உறவு பிரிவு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.