ஈப்போ , செப்டம்பர் 04-
TNB எனப்படும் Tenaga Nasional Berhad- டின் மின்சாரக் கட்டணப் பில்லுக்கு கட்டணக் கழிவு வழங்குவதாக கூறி தொலைபேசி வழி நடத்தப்படும் நூதன மோசடிகளுக்கு எதிராக பொது மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீஸ் துறை அறிவுறுத்தியுள்ளது.
அப்படியொரு கட்டணக் கழிவே இல்லாத நிலையில் அப்படியொரு சலுகை இருப்பதைப் போன்று கைப்பேசி வாயிலாக பொதுமக்களை நம்பவைத்து, கடந்த ஜுலை மாதத்திலிருந்து இந்த நூதன மோசடி நடத்தப்பட்டு வந்துள்ளதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி முகமது நசீர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி வழி ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 903 வெள்ளி வரையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக அந்த போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
மின்சாரக் கட்டணப் பில்லை செலுத்த விரும்பும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 10 விழுக்காடு வரை கட்டண கழிவு வழங்கப்படுவதாக கூறி, ஏமாற்றப்பட்டு இருப்பதாக ஏசிபி முகமது நசீர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுலை 8 ஆம் தேதிலிருந்து அக்டோபர் 27 ஆம் தேதி வரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்த ஒப்புக்கொண்ட 120 வாடிக்கையாளர்களை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.