மஸ்ஜிட் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது / பொது மக்களின் பாதுகாப்பு கட்டுப்பாடு

கோலாலம்பூர், செப்டம்பர் 05-

கோலாலம்பூரில் முக்கிய வர்த்தகப் பகுதியான ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஆள்விழுங்கிய பாதாள சாக்கடைக்குள் விழுந்து இந்தியப் பிரஜை விஜயலெட்சுமி காணாமல் போன சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வர்த்தகப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பு கட்டுப்பாடு, தீவிரப்படுத்ப்பட்டுள்ளதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

நில அமிழ்வு சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்புப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா இன்று தெரிவித்துள்ளார்.

மஸ்ஜிட் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நில அமிழ்வுப்பகுதிகளை கோலாலம்பூர் மாநகர் மன்றம் தொடர்ந்து சீரமைப்புப்பணியில் ஈடுபட்டு வரும் வேளையில் அப்பகுதிகளில் பொதுமக்கள் நெருங்கி விடாமல் இருப்பதற்கு அவர்களை கட்டப்படுத்தும் வகையில் போலீஸ்காரர்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளனர் என்று டத்தோ ருஸ்டி விளக்கினார்.

மஸ்ஜிட் இந்தியாவில் பாதுகாப்பு கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதே போலீசாரின் பொறுப்பாகும். பொதுமக்கள் விருப்பம் போல் அப்பகுதியில் நின்றுக்கொண்டு, சமூக வளைத்தளங்களுக்கான உள்ளடக்கத்தை பதிவு செய்வது அல்லது அப்பகுதியை மேற்பார்வையிடுவது போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை என்று டத்தோ ருஸ்டி விளக்கினார்.

மஸ்ஜிட் இந்தியாவில் 8 முதல் 10 இடங்களில் நில அமிழ்வுக்கான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மீண்டும் ஒரு துயரச்சம்பவம் நிகழ்ந்து விடாமல் உறுதி செய்வதற்கு பொதுமக்களை கண்காணிக்கவே போலீசார் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS