GST குறித்து விவாதிக்கப்படவில்லை/ அன்வார்

கோலாலம்பூர், செப்டம்பர் 05-

நாட்டில் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டதற்கு மாற்றாக GST எனப்படும் பொருள், சேவை வரி முறையை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் இதுவரையில் விவாதித்து இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் வரவுசெலவு வியூகம் மற்றும் செலவின உயர்வை கையாளுதற்கான முயற்சியாக அரசாங்க வருவாயை அதிகரிப்பதில் மட்டுமே அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ரஷியாவிற்கு இரண்டு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார், ரஷியாவின் முதன்மை துறைமுக நகரான Vladivostok- கில் மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS