தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத நிலையில் சிசு

குவாந்தன்,செப்டம்பர் 05

தொப்புள் கொடி இன்னும் அவிழ்க்கப்படாத நிலையில் சிசு ஒன்று, உயிருடன் ஒரு கருப்பு நிற Beg- பையில் கைவிடப்பட்டுக் கிடந்தது இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குவந்தானில் உள்ள சமூக நல இல்லத்தின் வாசலில் அந்த குழந்தை கைவிடப்பட்டுக் கிடந்ததை அந்த இல்லத்தின் பணியாளர் ஒருவர் கண்டு, போலீசுக்கு தகவல் கொடுத்ததாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி புசு தெரிவித்தார்.

அந்த சமூக நல இல்லத்தின் வாசல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் பதிவை சோதனை செய்து பார்த்தில், நேற்று இரவு அந்த இல்லத்திற்கு காரில் வந்த ஆடவர் ஒருவர், வாசலிலேயே அந்த கறுப்பு நிற Beg- பையை கைவிட்டு சென்று இருப்பது தெரியவந்துள்ளது என்று ஏசிபி வான் குறிப்பிட்டார்.

உடல் பரிசோதனைக்காக அந்த சிசு, குவந்தான்,தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS