மின்சாரம் தாக்கி புல்வெட்டுத் தொழிலாளி மரணம்

மலாக்கா,செப்டம்பர் 05-

சாலையோரத்தில் புல்வெட்டும் பணிக்கு இடையூறாக இருந்த மின்சாரக்கம்பத்தின் அடியில் சிதறிக் கிடந்த சில ஒயர்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட புல்வெட்டும் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் மலாக்கா, புக்கிட் பாரு, தமான் பெர்கோடா என்ற இடத்தில் நிகழ்ந்தது. ஹபீப் உல்லா என்று அடையாளம் கூறப்பட்ட 39 வயது வங்காளதேசத் தொழிலாளி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மாண்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.

அந்த வங்காளதேசத் தொழிலாளரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். எனினும் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை என்று கிறிஸ்டோபர் பாட்டிட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS