பூச்சோங்,செப்டம்பர் 06-
பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவரான ஓர் ஆப்பிரிக்கப்பிரஜை, போலீசாரின் அதிரடித் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பூச்சோங், பூச்சோங் ஜெயா- வில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்- வீட்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஆப்பிரிக்க கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த அந்த சந்தேகப்பேர்வழி, சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட். ஷுஹைலி முகமது ஜைன் தெரிவித்தார்.
நேற்றிரவு 10.50 மணியளவில் மெனாரா KLH, அபார்ட்மெண்ட் வீடமைப்புப்பகுதியின் ஒன்பதாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார், அந்த ப்பிரிக்கப் பிரஜையை கைது செய்ய முற்பட்டனர்.
எனினும்அந்த நபர், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி நடவக்கையில் அந்பர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டத்தோஸ்ரீ முகமட். ஷுஹைலி குறிப்பிட்டார்.
அந்த வீட்டில் தனியொரு நபராக இருந்த அந்த ஆப்பிரிக்ப்பிரஜை, போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து விட்டார். மாறாக, துப்பாக்கி பிரயோகம் நடத்தத்தொடங்கி விட்டார் என்று சம்பவ நிகழ்ந்த இடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ முகமட். ஷுஹைலி இதனை தெரிவித்தார்.
அந்த சந்தேகப்பேர்வழி தங்கியிருந்த வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, இரண்டு வெட்டுக் கத்திகள், வாகனத்தின் போலி பதிவு எண் பட்டை, ஒரு பையில் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
அந்த நபரின் பெயர், வயது ஆராயப்பட்டு வருகிறது.
அந்த நபர் தன் வசம் வைத்திருந்த ஐ.நா. தூதரகத்தின் அகதிகளுக்கான அட்டை, போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வந்ததாக நம்பப்படும் அந்த நபர், துப்பாக்கியேந்திய கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது என்று டத்தோஸ்ரீ முகமட். ஷுஹைலி குறிப்பிட்டார்.