ரோஸ்மாவின் நிலை இன்னும் தெரியவில்லை

கோலாலம்பூர், செப்டம்பர் 06-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர், எதிர்நோக்கியுள்ள சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பான 12 குற்றச்சாட்டுகள் மற்றும் வருமான வரி வாரியத்தில் வருமானத்தை அறிவிக்காதது தொடர்பில் 5 குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை நிலைநிறுத்துவதா? அல்லது மீட்டுக்கொள்வதா? என்பது குறித்து இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது.

எனினும் சட்டத்துறை அலுவலம், இது தொடர்பாக முடிவெடுத்துள்ளதா? என்பது குறித்து இன்னும் தீர்க்கமாக தெரியவில்லை.

ரோஸ்மாவிற்கு எதிரான வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இவ்விவகாரம் தொடர்பாக சட்டத்துறை அலுவலகத்தின் தீர்க்கமான முடிவை அறிந்து கொள்வதற்கு தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர்அஹ்மத் அக்ரம் கரீப் , / உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டியிடம் தெரிவித்தார்.

தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மீட்டுக்கொள்ளுமாறு ரோஸ்மா மன்சோர், சட்டத்துறை அலுவலகத்தில் மூன்றாவது முறையாக சமர்ப்பித்துள்ள பிரநிதித்துவ மனு தொடர்பான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

WATCH OUR LATEST NEWS