தாய், தந்தையை வெட்டிக்கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப்டம்பர் 06-

தனது சொந்த தாயாரையும், தந்தையையும் வெட்டிக்கொன்றதாக ஆடவர் ஒருவர் கோலாலம்பூர் உயர் நீதிமனறத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

அஃபெண்டி முஹம்மது அகஸ் என்ற 43 வயதுடைய அந்த நபர், உயர் நீதிமன்ற நீதிபதி K. முனியாண்டி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் பென்சலா ஹிலிர் , கம்போங் சுங்கை பென்சாலா என்ற இடத்தில் உள்ள வீட்டில் தனது 82 வயது தந்தை முஹம்மது அகஸ் உமர் மற்றும் 72 வயது தாயார் டார்லிஸ்மா ஞாது சலே ஆகியோரை கொலை செய்ததாக அந்த இளைஞர் மீது குற்றஞ்சாட்டு கொண்டு வரப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS