பாங்கி,செப்டம்பர் 06-
ஜாகிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா அதிகாரிகள், அனைத்து அரசாங்க இலாகாக்களிலும் நியமிக்கப்படுவதாக கூறப்படும் சர்ச்சை தொடர்பில் இந்து, பெளத்த, கிறிஸ்துவ, சீக்கிய மற்றும் Taoisme ஆகிய சமயத்தவர்களை பிரதிநிதிக்கும் மலேசிய சர்வ சமய மன்றத்தினருடன் பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒரு சந்திப்பு நடத்துவதாக இருந்தது.
எனினும் அந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அமைச்சர் டாக்டர் முகமட் நயிம்
இந்த சந்திப்புக்கூட்டத்தில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் டகாங் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும் அவர் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் முகமட் நயிம் அறிவித்துள்ளார்.
சர்வ சமய மன்றத்துடனான சந்திப்பு மற்றொரு பொருத்தமான தேதியில் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.