புக்கிட் அமானில் வாக்குமூலம் அளித்தார் தெரசா கோக்

கோலாலம்பூர், செப்டம்பர் 10-

Halal சான்றிதழ் விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள DAP உதவித் தலைவரும், செபுதே நாடாளுமன்ற உறுப்பினருமான தெரசா கோக் , இன்று காலையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு உட்பட்டுள்ளார்.

காலை 9.42 மணியளவில் தனது வழக்கறிஞர் சயரெட்சன் ஜோஹன்- னுடன் தெரசா கோக் , புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வளாகத்தில் காணப்பட்டார்.

Halal சான்றிதழ் விவகாரம் தொடர்பில் அந்த DAP தலைவரிடம் காலை 10.00 மணிக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று இதற்கு முன்பு போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்து இருந்தார்.

பன்றி இறைச்சி மற்றும் மதுபான வகை விற்பனை செய்யாத உணவகங்களுக்கும், உணவு விநியோகிப்பு நிறுவனங்களுக்கும் Halal சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதற்கு மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான Jakim முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் கேள்வி எழுப்பியதற்காக அவருக்கு எதிராக ஐந்து போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் Halau சான்றிதல் கட்டாயமாக்கப்படுவானால் சிறு வியாபாரிகளுக்கு அது பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும், மலேசியாவின் இந்த நடைமுறை வெளிநாட்டவரை எள்ளி நகையாட வைக்கும் என்று திரேசா கொக் கூறியது தொடர்பில் அவருக்கு எதிராக இந்த போலீஸ் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS