சர்ச்சைக்குரிய வலைப்பதிவு எழுத்தாளர் ராஜா பெட்ரா காலமானார்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 10-

சர்ச்சைக்குரிய வலைப்பதிவு எழுத்தாளர் ராஜா பெட்ரா கமருதீன் நேற்று திங்கட்கிழமை இரவு இங்கிலாந்தில் காலமானார். அவருக்கு வயது 74.

ராஜா பெட்ரா- வின் மறைவை அவரின் சகோதரர் Raja Idris இன்று காலையில் உறுதிப்படுத்தினார்.

இங்கிலாந்து நேரப்படி நேற்று இரவு 11.26 மணியளவில் ராஜா பெட்ரா,மான்செஸ்டர் -ரில் காலமானதாக அவர் குறிப்பிட்டார்.

ரத்தத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்று, நுரையீரலுக்கும், கல்லீரலுக்கும் பரவி ராஜா பெட்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவரின் மனைவி மரினா தெரிவித்தார்.

RPK என்று சுருங்க அழைக்கப்படும் ராஜா பெட்ரா , கடந்த 1950 ஆம் ஆண்டு செப்டபம்ர் 27 ஆம் தேதி, கிளந்தான், கோத்தாபாருவில் பிறந்தார். அவர் மலேசியாவில் Malaysia Today என்ற செய்தி அகப்பக்கத்தை நடத்தி வந்ததுடன் நாட்டின் அரசியல் நிலவரங்கள் குறித்து எழுதிய வந்த ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளராக பார்க்கப்பட்டார்..

ராஜா பெட்ரா , கடந்த 2001 ஆம் ஆண்டு மற்றும் 2008 ஆம் ஆ ண்டு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமான ISA- வின் ( இசா ) கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், KEADILAN கட்சியை தொங்கிய போது அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ராஜா பெட்ரா, இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட போது, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS