மலாக்கா,செப்டம்பர் 10-
மலாக்கா மாநிலம் முழுவதும் விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டு விட்டதாக லட்சம் கணக்கில் பணம் கோருவதற்கு போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்பில் விளம்பர ஒப்பந்த நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாகி ஆகியோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
இன்று காலையில் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 46 மற்றும் 48 வயதுடைய அந்த இரண்டு நபர்களையும் ஐந்து நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி அனுமதி அளித்துள்ளார்.
SPRM – மின் ஆரஞ்சு நிற தடுப்புக்காவல் உடையில் காணப்பட்ட அந்த இருவரும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இன்று காலை 9.05 மணிக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.