கோலாலம்பூர், செப்டம்பர் 10-
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா -வின் சாலையின் ஒரு பகுதி பொது மக்களுக்கு மூடப்படுகிறது என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிவித்துள்ளது.
விஸ்மா யாகின் -னிலிருந்து பிட் போலிஸ் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வரை சுமார் 160 மீட்டர் தூரம் மூடப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.
மஸ்ஜிட் இந்தியாவின் நிலத்தடி அமைப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் மற்றும் பூமி வேலைகளுக்காக அந்த பகுதி மூடப்படுவதாக மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.