இனி டோல்கேட்டில் கட்டணம் இல்லாமல் போகலாம்.! புதிய விதி அறிமுகம்- எந்த எந்த வாகனங்களுக்கு தெரியுமா.?

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டண வசூல் முறையில் புதிய மாற்றம். செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் வாகனங்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்

தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெறு வருகிறது. அந்த வகையில் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது. சாலைகள் அமைப்பது, பராமரிப்பது என பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சாலையிலும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 4 சாலை, 8சாலை என விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து சாலை அமைக்கப்பட்டதற்கு பிறகு அந்த சாலையை பராமரிக்கும் பணியை தனியார் அமைப்புகளுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை வழங்குகிறது. குறிப்பிட்ட தூரத்தில் டோல் கேட்கள் அமைக்கப்படுகிறது. அப்போது கார், பேருந்து, லாரி போன்றவற்றிக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் 55 ரூபாயும் ஒரு சில இடங்களில் 70 ரூபாய் வரையும் ஒருமுறை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதமும் மாற்றப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரை தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதனையடுத்து மீதமுள்ள சுங்கச்சாவடிக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்பட்டது. 

WATCH OUR LATEST NEWS