குவாந்தன்,செப்டம்பர் 11-
சிலாங்கூரிலும், நெகிரிசெம்பிலானிலும் உள்ள ஆதரவற்ற இல்லங்களிலிருந்து சிறார்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் GISBH என்ற Global Ikhwan Services and Business Holdings நிறுவனத்திற்கு எதிராக போலீஸ் படை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமானவை என்று நம்பப்படும் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்தது, ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியது மற்றும் ஓரினப்புணர்ச்சி குறித்து கற்றுக்கொடுத்ததாக அந்த நிறுவனத்திற்கு எதிராக புகார்கள் கூறப்படுகின்றன.
இதன் தொடர்பில் அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதாக டான்ஸ்ரீ ரஸாருதீன் குறிப்பிட்டார்.
தவிர அந்த ஆதரவற்ற இல்லங்களிலிருந்து 402 சிறார்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.