Akmal விவகாரத்தை கவனித்துக்கொள்ளுங்கள்

கூலைய் ,செப்டம்பர் 11-

அம்னோவில் மிகுந்த சர்ச்சைக்குரிய நபராக பார்க்கப்படும் அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே சம்பந்தப்பட்டுள்ள விவகாரத்தை அம்னோவே கவனித்துக்கெள்ள வேண்டும் என்று ஜோகூர் மாநில டிஏபி தலைவர் ஒருவர் அறிவுறுத்தியுள்ளார்.

Halal சான்றிதழ் விவகாரத்தில் அக்மல் வெளியிடக்கூடிய அறிக்கைகள் வருகின்ற மஹ்கொட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பை பாதிக்கச் செய்து விடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

எனவே தனது இளைஞர் பிரிவு தலைவரின் செயலை அம்னோவே நிர்வகித்துக்கொள்ள வேண்டும் என்று டிஏபி, யின் ஜோகூர் மாநில உதவித் தலைவர் ஷேக் உமர் பக்ரிப் அலி கேட்டுக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS