லஹாட் டது ,செப்டம்பர் 12-
சபா, லஹத் டது, ஜாலான் சிலபுகான், சுங்கை மாதம்பா என்ற ஆற்றில் தோட்டத் தொழிலாளரை கடித்துக்குதறி உடலை இழுத்துச் சென்றதாக நம்பப்படும் ராட்சஷ முதலை சுட்டுக்கொல்லப்பட்டது.
அந்த முதலையின் நடமாட்டம் தொடர்ந்து அந்த ஆற்றில் இருப்பதை கண்டு அச்சத்தில் உறைந்த மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த ராட்சஷ முதலை கொல்லப்பட்டது.
ஆற்றின் சேற்றுப்பகுதியில் செறுகி வைத்திருந்த அந்த ராட்ஷச முதலையிடமிருந்து தோட்டத் தொழிலாளியின் உடலை மீட்பதற்கு PERHILITAN எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு ரேஞ்சர்கள் வரவழைக்கப்பட்டு அந்த முதலையின் மீது ஐந்து துப்பாக்கிச்சூட்டுகள் நடத்தப்பட்டதாாக தீயணைப்பு, மீட்புப்படை நடவடிக்கை மையத்தின் அதிகாரி ரிக்கி மோகன் சிங் தெரிவித்தார்.