லஹாட் டது, செப்டம்பர் 12-
மலேசியா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு பேணி வருவதை விரும்புகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் சுதந்திரம் பெற்ற நாடு என்ற முறையில் எந்த நாட்டுடன், எந்த மக்களுடன் நட்பு பாராட்ட வேண்டும் , இரு வழி உறவை பேணி வர வேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடிய உரிமையையும் மலேசியா கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
தவிர மற்ற நாடுகளுடன் தூதரக உறவை பேணி வரும் விவகாரத்தில் எந்தவொரு தரப்பும் நெருக்குதல் அளிக்க முயற்சிக்கக்கூடாது என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். மலேசியாவைப் பொறுத்தவரையில் அனைவருடனும் நட்பு பாராட்டையே விரும்புகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
டத்தோஸ்ரீ அன்வார் அண்மையில் ரஷியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அந்நாட்டு அதிபர் Vladimir Putin- னை சந்தித்து மலேசியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தியுள்ளார்.
ரஷியா அதிபரை தாம் சந்தித்தது தொடர்பில் மலேசியா எவ்வாறு ரஷியாவுடன் நல்லுறவை கொண்டிருக்கிறது என்பது குறித்து சிலர் கேள்வி எழுப்பி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மலேசியா ஒரு சுதந்திரமான நாடு. எந்த நாட்டுடன், யாருடன், நட்பு வைக்க வேண்டும் என்ற தீர்மானிகும் முழு உரிமை அதற்கு உண்டு என்று பிரதமர் விளக்கினார்.