அலோர் கஜா ,செப்டம்பர் 13-
தனது பராமரிப்பில் விடப்பட்டுள்ள எட்டு மாத கைக் குழந்தையை கொன்றதாக குழந்தை பராமரிப்பாளர் ஒருவர், மலாக்கா, அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
அஃபிஃபா அப்துல்லா ஷுஹைமி என்ற 34 வயதுடைய அந்த குழந்தை பராமரிப்பாளர் , மாஜிஸ்திரேட் தியோ ஷு யீ முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி மலாக்கா, தமன் கெளமக் உதமா, ஜாலான் கெளமக் உதமா 3 என்ற முகவரியில் உள்ள TASKA சிறார் பராமரிப்பு மையத்தில் எட்டு மாத ஆண் குழந்தைக்கு மரணம் விளைவித்தாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.