குளுவாங் , செப்டம்பர் 13-
ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.
வேட்புமனுத்தாக்கல் டெவான் துங்கு இப்ராஹிம் இஸ்மாயில் பொது மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வலியுறுத்தி, மண்டபத்தில் அறிக்கைகள் ஒட்டப்பட்ட நிலையில் வேட்புமனுத்தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையமான SPR அறிவித்துள்ளது.
காலை 9 மணிக்கு தொடங்கி, 10 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்று SPR தெரிவித்துள்ளது.