அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் லஞ்ச ஊழல், மூன்று அதிகாரிகள் கைது

ஈப்போ , செப்டம்பர் 13-

அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத்திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக மூன்று குடிநுழைவு அதிகாரிகள் மற்றும் அந்நியத்தொழிலாளர்களுக்கான ஏஜெண்டு ஆகிய நால்வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் ஈப்போவில் கைது செய்யப்பட்டனர். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணியிலிருந்து இரவு 7.15 மணி வரையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த நால்வரும் பிடிபட்டதாக SPRM வட்டாரம் தெரிவித்தது.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய அந்நியத் தொழிலாளர்களுக்கான மறு கட்டமைப்புத்திட்டத்தின் கீழ் தன்னார்வத்தின் பேரில் நாடு திரும்பவிருக்கும் அந்நியத் தொழிலாளர்களிடம் ஏஜெண்டு மூலம் தலா 50 வெள்ளி முதல் 300 வெள்ளி வரை இந்த நால்வரும் லஞ்சம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS