159 பேருக்கு தடுப்புக்காவல், ஐஜிபி தகவல்

கோலாலம்பூர், செப்டம்பர் 13-

சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள சமூக நல இல்லங்களில் 402 சிறார்களைத் துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் 171 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் 159 பேருக்கு தடுப்புக்காவல் பெறப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் அறிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 171 பேரையும் கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையம் மற்றும் மேலும் சில இடங்களில் தடுத்து வைத்து, விசாரணை செய்யப்பட்டதில் 159 பேருக்கு மட்டும் தடுப்புக்காவல் பெறப்பட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

எஞ்சிய 12 பேர், வயது குறைந்தவர்கள் ஆவார். அவர்களுக்கு தடுப்புக்காவல் அனுமதி பெறப்படவில்லை. இவ்விரு மாநிலங்களிலும் பிடிபட்டுள்ள 159 பேருக்கு நான்கு நாள் முதல் 7 நாள் தடுப்புக்காவல் அனுமதிப்பெறப்பட்ள்ளதாக ஐஜிபி விளக்கினார்.

மீட்கப்பட்ட வயது குறைந்த பிள்ளைகளில் 13 பேர் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS