IPL 2025: தோனி செய்த செயல்.. கண்களை பார்க்கவே பயந்த சிஎஸ்கே வீரர்கள்.. உண்மையை உடைத்த பத்ரிநாத்

செப்டம்பர் 14-

சென்னை: “கேப்டன் கூல்” தோனி எப்போதுமே அமைதியாகவே இருப்பார் என்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால், சில சமயம் அவரும் கோபம் அடைந்து இருக்கிறார் என அவருடன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுப்பிரமணியம் பத்ரிநாத் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான பின்னரே இந்திய அணி பல்வேறு கோப்பைகளை வரிசையாக வென்றது. அதே போல ஐபிஎல் தொடரிலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு அந்த அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்து இருக்கிறார். மைதானத்தில் தோனி கோபம் கொண்ட சம்பவங்கள் என்பது மிக மிக அரிதாகவே நடந்துள்ளது. ஓரிரு சமயங்களில் அவர் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

அதை தவிர பெரிதாக வேறு எந்த வகையிலும் அவர் கோபம் அடைந்ததில்லை. ஆனால், சிஎஸ்கே அணியின் துவக்க காலத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டி ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே வீரர்கள் சரியாக ஆடாத எடுத்து தோணி கடுமையான கோபத்துடன் இருந்ததாக சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறி இருக்கிறார். இது குறித்து பத்ரிநாத் பேசுகையில், “அவரும் மனிதர் தான். அவரும் சில

சமயங்களில் அமைதியை இழப்பார். ஆனால், அது எப்போதும் ஆடுகளத்தில் நடந்தது இல்லை. அவர் எப்போதுமே தான் அமைதி இன்றி இருப்பதை எதிரணிக்கு வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி சென்னையில் நடைபெற்றது. நாங்கள் 110 ரன்களை ஒட்டிய இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்தோம்.” “இடையே நாங்கள் வரிசையாக

விக்கெட்டுகளை இழந்து அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தோம். நான் அனில் கும்ப்ளே பந்து வீச்சில் ஒரு ஷாட் அடிக்க ஆசைப்பட்டு எல் பி டபிள்யூ முறையில் அவுட் ஆகிவிட்டேன். நான் ஓய்வறைக்குள் நின்று கொண்டிருந்தேன். அப்போது தோனி உள்ளே வந்தார். அங்கு ஒரு சிறிய வாட்டர் பாட்டில் இருந்தது. தோனி அதை எட்டி உதைத்தார். அந்த பாட்டில் பறந்து சென்று விழுந்தது. நாங்கள் அவரது கண்ணை பார்க்க கூட பயந்தோம். ஆனால், அவ்வளவுதான். அவர் அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதுதான் தோனி.” என்றார் சுப்பிரமணியன் பத்ரிநாத்.

WATCH OUR LATEST NEWS