”தயவுசெய்து என்னைக் காப்பாத்துங்க”-குவைத்தில் சித்திரவதை அனுபவிக்கும் ஆந்திரப் பெண் வீடியோ வெளியீடு!

செப்டம்பர் 14-

வறுமை, கடன், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளைத் தவிர்க்கவும், அதிகமாக சம்பாதிக்கவும் இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்கின்றனர். அதில் பலருக்கு அனைத்து வகையான சலுகைகளுடன் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்துவருகிறது. ஆனால், சிலரோ மோசமான பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டு சித்திரவதையை அனுபவிக்கின்றனர். பின்னர் அதுகுறித்த தகவல் ஊடக வெளிச்சத்திற்கு வந்தபிறகு அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர்.

அப்படியான ஒரு சம்பவம் ஆந்திரப் பெண்ணுக்கு நடந்துள்ளது. அதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதுடன், அதற்காக இந்திய அரசு உதவ வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். நான் இங்கே சித்திரவதைக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி கணவர் உள்ளனர். நான் அவர்களைக் காப்பாற்றுவதற்காக குவைத் வந்தேன். ஆனால் நான் இங்கே சித்திரவதைக்கு ஆளாகியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS