தங்காக் ,செப்டம்பர் 14-
ஜோகூர், தங்காக், குணுங் லேடாங், கோலம் புத்தேரி – நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்திருந்த சுமார் 60 பேர், மலை முகட்டிலிருந்து திடீரென்று பாய்ந்த நீரின் வேகத்தினால், அந்த மலைப்பாங்கான பகுதியிலிருந்து கீழே இறங்க முடியாமல் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
கனத்த மலையின் காரணமாக மலைமுகட்டிலிருந்து வேகமாக பாய்ந்த நீரினால் இன்று மதியம் 12.50 மணியளவில் அந்த 60 பேரும் பாதிக்கப்பட்டதாக தங்காக் மாவட்ட தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் செயலாக்க கமாண்டர் அஸ்லி ஹாஷிம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த 60 பேரும், கயிற்றின் மூலம் மலையிலிருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். ஒன்பது வீரர்கள் பங்கேற்ற இந்த மீட்பு நடவடிக்கை பிற்பகல் 3.18 மணியளவில் முடிவுற்றதாக அவர் குறிப்பிட்டார்.